சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor First Half Shooting Over

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor First Half Shooting Over

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Doctor First Half Shooting Over

கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலின் போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் நெல்சன்.இந்த படத்தின் முதல் பாதிக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றும் அதற்கான எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வர்கின்றன என்றும் தெரிவித்தார்.இன்னும் 20-25 நாட்கள் ஷூட்டிங் மீதமுள்ளது என்றும் இவை இரண்டாம் பாதியில் இடம்பெறும் காட்சிகள் என்றும் அவர் தெரிவித்தார்

Sivakarthikeyan Doctor First Half Shooting Over