சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் தேதி வெளியாகி திரையரங்குங்களில் வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் டான்.கல்லூரி மாணவன் தன் கனவை நோக்கி எடுத்து வைக்கும் படிகள் குறித்து ஜாலியாகவும் எமோஷனல் ஆகவும் தெரிவித்துள்ளது இந்த படம்.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை அள்ளி வருகிறது இந்த படம்.லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.எஸ் ஜே சூர்யா,சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பல இடங்களில் இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

சமீபத்தில் ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் சிவகார்த்திகேயன் இயக்குனர் சிபி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர் அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயன் , அவர்களுடன் இணைந்து டான் படத்தின் ஜலபுல ஜங்கு பாடலுக்கு நடனமாடியுள்ளார் இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.