டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Simran Denies Acting in Chandramukhi 2

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தில் லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

Simran Denies Acting in Chandramukhi 2

,இந்த படத்தை பி.வாசு இயக்குவார் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவலை லாரன்ஸ் வெளியிட்டார்.இந்த படத்தில் ஜோதிகா வேடத்தில் சிம்ரன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இந்த செய்தி தவறானது அந்த படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என்று சிம்ரன் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.