தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் சிபிராஜும் ஒருவர். என்னதான் சத்ய ராஜ் எனும் உச்ச நட்சத்திரத்தின் மகனாக இருந்தாலும் திரையில் சாதிப்பது இவர் கையில்லே உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு வெளியான நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்-பேக் என்று தான் கூற வேண்டும். பிறகு தொடர்ச்சியாக ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்யா போன்ற படங்களில் அசத்தினார். 

Sibiraj

தற்போது இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கவுள்ளார். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், சத்யராஜும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார். இத்திரைப்படம் மர்மம் நிறைந்த கமெர்ஷியல் படமாக உருவாகவுள்ளதென தெரிய வந்தது.

Sathyaraj

சிபிராஜ் கைவசம் ரங்கா, வால்டர், மாயோன் போன்ற படங்கள் உள்ளது.