பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.

Shriya To Do Special Role in Rajamouli RRR

RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Shriya To Do Special Role in Rajamouli RRR

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.ஃபிளாஷ்பேக்கில் அஜய் தேவ்கனுடன் நடித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.