கடந்த 2005-ம் ஆண்டு வெளியான மழை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதன் பின் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் என ஹிட் படங்களில் நடித்தார் ஸ்ரேயா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் கலக்கியவர். 

Shriya

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ் என்பவரை திருமணம் செய்தார் நடிகை ஸ்ரேயா. தற்போது நடிகை ஸ்ரேயா நடிப்பில் நரகாசூரன், சண்டக்காரி உள்ளிட்ட படங்கள் வெளிவரவிருக்கிறது. ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் ஸ்ரேயா சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

Shriya

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் இந்த வித்தியாசமான காலகட்டங்களில் உங்களுக்காக எங்கள் சிரிப்பை வழங்குகிறோம். இதிலிருந்து உங்கள் சந்தோஷத்தை கண்டுபிடிக்க முடியும். பால்கனியில் என் காலைப்பொழுது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A bit of laughter , from us to you , in these crazy times. May you find happiness with in .... My balcony mornings....

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on