தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன். 

Shocking Actor Vivek Mother Passed Away

சுற்றுசூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் எனும் நம்பிக்கை விதையை ஜனங்கள் மனதில் விதைத்த பெருமை ஜனங்களின் கலைஞன் விவேக்கையே சேரும். வெள்ளைப்பூக்கள் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிகில் படத்திலும் நடித்து வருகிறார்.

Shocking Actor Vivek Mother Passed Away

தற்போது வெளியான செய்தி என்னவென்றால், நடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் இயற்கை எய்தினார் என்ற தகவல் வெளியானது. 86 வயதாகும் மணியம்மாள் மாரடைப்பால் நேற்று 12:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார். இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். நாளை அவரது சொந்தவூரான சங்கரன்கோவிலை அடுத்த பெருங்கோட்டூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. நடிகர் விவேக்கின் தாயார் மறைவுக்கு அவரது திரையுலக நண்பர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.