கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட்டானது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கொண்டு இந்த படம் உருவானது.

Asuran Narappa

தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

shivarajkumar

இந்நிலையில் அசுரன் படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகர் சிவராஜ் குமார் பேச்சில் உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த ரோலில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமாரை பார்க்க ஆவலில் உள்ளனர் அவரது ரசிகர்கள். விரைவில் இதுகுறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.