ஷாந்தனு மற்றும் அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் முருங்கைகாய் சிப்ஸ். இப்படத்தின் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. லிப்ரா ரவிந்தர் சந்திரசேகர் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர். 

படத்தின் போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்ட்டி என இடம்பெற்றிருப்பதால் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்தனர் ரசிகர்கள். அது தவிர்த்து முருங்கைகாய் குறித்த சமாச்சாரம் பாக்யராஜ் படங்களில் வரும் சிறப்பாம்சம் என்பதால், இப்படத்திற்கு ஆவலாக உள்ளனர் திரை விரும்பிகள்.

இந்த படத்தை தொடர்ந்து இராவண கோட்டம் படத்தில் நடிக்கிறார் ஷாந்தனு. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. விக்ரம் சுகுமாரன் இயக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 

கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார். இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார். வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு.