வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கினர் படக்குழுவினர். விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார். 

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் ஷாந்தனு, உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல் என பல வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார். 

இந்நிலையில் ஷாந்தனு அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியானது.  முருங்கைகாய் சிப்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். 

ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். தரண் இசையமைக்கும் இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா ஆகியோர் இதில் நடிக்கவுள்ளனர். 

போஸ்டரில் 100 சதவீதம் நாட்டி, 100 சதவீதம் டேஸ்ட்டி என இடம்பெற்றிருப்பதால் அடல்ட் காமெடி படமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். அது தவிர்த்து முருங்கைகாய் குறித்த சமாச்சாரம் பாக்யராஜ் படங்களில் வரும் சிறப்பாம்சம் என்பதால், இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.