சக்கரக்கட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக கால் பதித்தவர் நடிகர் ஷாந்தனு. அலட்டிக்கொள்ளாத நடிப்பு, நடனம் என இன்று வரை தனக்கென ஓர் ரசிகர்களை கொண்டவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வானம் கொட்டட்டும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

Shanthanu

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் உருவாகிய மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில், தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன், ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Shanthanu

குட்டி கதை பாடலை தொடர்ந்து இரண்டாம் பாடல் வாத்தி கம்மிங் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலுக்கு ஷாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி விஜய் கவர் வெர்ஷன் செய்து அசத்தியுள்ளனர். உலகளவில் ட்ரெண்ட் ஆகும் இந்த வாத்தி ஸ்டெப் சவாலில் அனைத்து தளபதி ரசிகர்களும் பங்கேற்று வருகின்றனர்.