லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். 

master

படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடலை விஜய் பாடி அசத்தினார். இதனைத்தொடர்ந்து இரண்டாம் பாடலான வாத்தி இஸ் கம்மிங் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. 

Shanthanu Shanthanu

படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டரில், முதல் முறையாக விஜய் அண்ணா டான்ஸ் ஆடுவதை நேரில் பார்த்தேன். மரண எனர்ஜி, அவர் நடனமாடி முடித்ததும் செட்டில் எல்லாரும் கைத்தட்டினார்கள் என்பதை பதிவு செய்துள்ளார். இந்த பாடல் தர லோக்கலான பாட்டு...அனிருத் ப்ரோ பிரிச்சிட்டீங்க என்று இசையமைப்பாளர் அனிருத்தை பாராட்டி பதிவு செய்துள்ளார்.