தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.சகாப்தம் படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.இதனை தொடர்ந்து P.G.முத்தையா இயக்கத்தில் வெளிவந்த மதுரவீரன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் சிவாவிடம் உதவியாளராக இருந்த பூபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் மித்ரன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ரோனிகா சிங்,வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அருண் ராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் காசி வர்மன் இயக்கவுள்ளார் என்றும் இந்த படத்தினை கே ப்ரோடுக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.