உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்திலும் கமல்ஹாசன் முதியவராகவும், இளமை தோற்றத்திலும் இரு வேடங்களில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 

ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் இப்போதும் அவருக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் வெளியானது, சேனாபதியை மீண்டும் கண்ட ரசிகர்கள் தெம்புடன் வரவேற்றனர்.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை காஜல் அகர்வால் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் தெரியவந்தது. தற்போது இணையத்தில் இந்தியன் 2-ல் நடிப்போர் குறித்த பட்டியல் வைரலாகி வருகிறது. அப்பதிவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது. ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது.

தற்போது கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்தியன் 2 படத்திற்காக ஒப்பந்தமானது குறித்து பேசியுள்ளார். மேலும் இயக்குனர் ஷங்கரின் நற்குணம் குறித்தும் பகிர்ந்துள்ளார். கீழுள்ள லிங்கில் கண்டு களிக்கலாம்.