மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

sexual harassment

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஆராய்ச்சி படிப்பு மாணவி கொடுத்துள்ள பாலியல் புகாரால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

கேரளாவில் உள்ள கல்லூரியில் பணியாற்றும் பெண் பேராசிரியர் ஒருவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இதழியல் முனைவர் ஆய்வுப் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்தநிலையில் தான், கடந்த டிசம்பர் மாதம் அத்துறைத் தலைவர் கர்ணமகாராஜா மீது அவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “தாம், கல்லூரியில் சேர்ந்தது முதல், தன்னுடைய டெஸ்கை அவருடைய அறைக்குள் மாற்றி அமைத்து, நாள் முழுதும் அவர் கண் பார்வையிலயே இருப்பதுபோல் பார்த்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் சொல்வதைக் கேட்டு நடந்தால், இங்கேயே வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி தொல்லை செய்தார் என்றும், வாட்ஸ்அப், மெயிலிலும் தொடர்ந்து பாலியல் ரீதியாக டார்ச்சர் செய்ததாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். 

sexual harassment

மேலும், அவர் சொல்வதைக் கேட்காததால், தன்னுடைய வருகைப் பதிவேட்டை மறைத்து வைத்து விட்டு, அதைக் காணவில்லை என்று நாடகம் ஆடியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துறையில் தான் மட்டுமே பெண்ணாக இருப்பதால், தன்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

நிரந்தர பேராசிரியர் பணிக்காகத் தாம் இங்கு முனைவர் ஆய்வுப் படிப்பில் சேர்ந்ததாகவும், அதற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்தால்தான், முறையாகப் பட்டம் பெற முடியும் என்று கர்ணமகாராஜா தன்னை கட்டாயப்படுத்தியதால், கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து அடிக்கடி பணம் கேட்டதாகவும், கொடுக்க மறுத்ததால், முனைவர் படிப்பை முடிக்க முடியாது என்று தன்னை அடிக்கடி மிரட்டியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்த கர்ண மகாராஜன், இது பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்துவிட்டார்.

இதனையடுத்து, மாணவியின் புகார் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் கூடி விவாதித்ததில், பேராசிரியர் கர்ண மகாராஜனுக்குக் கட்டாய பணி ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 மாதங்கள் கடந்த நிலையில், தற்போது பல்கலைக் கழக நிர்வாகம், அவரை கட்டாய பணி ஓய்வில் அனுப்பி உள்ளது.

sexual harassment

இதனிடையே, மாணவியின் பாலியல் புகார் தொடர்பாக, பேராசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவருக்குக் கட்டாய பணி ஓய்வில் அனுப்பப்படுவது, காமராஜர் பல்கலைக் கழக வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

ஏற்கனவே பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான சர்ச்சை ஏற்பட்டபோது, அதில் அடிபட்ட பேராசிரியர் கர்ண மகாராஜன் மீது, மேலும் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.