தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.

கொரோனா காரணமாக பழைய எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பட்டு வருகின்றன.கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்,இதற்கு செம்பருத்தி சீரியல் பிரபலங்களும் விதிவிலக்கல்ல.ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது,இன்ஸ்டாகிராமில் லைவ் வருவது என்று அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தனர்.இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் கதிருக்கு சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்தது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.இதற்கு தயாராக இருக்கும்படியும் FEFSI அறிவித்திருந்தனர்.இதனை தொடர்ந்து ஜீ தமிலில் TRP-யை அள்ளிக்குவித்து வரும் தொடர்களில் ஒன்றான செம்பருத்தி தொடரின் செட் சானிடைஸ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறது.இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Sembaruthi Serial Set Sanitized and Getting Ready For Shoot

Sembaruthi Serial Set Sanitized and Getting Ready For Shoot

Sembaruthi Serial Set Sanitized and Getting Ready For Shoot