விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கார்த்திக் ராஜ்.இந்த தொடரிலேயே ரசிகர்களின் கவனத்தை  ஈர்த்த இவர் , அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரின் ஹீரோவாக நடித்தார் கார்த்திக்.இந்த தொடர் பெரிய வரவேற்பை பெற்று செம ஹிட் அடித்திருந்தது.

இந்த தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் கார்த்திக்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் நடந்த ஜோடி நம்பர் 1 தொடரில் பங்கேற்று அரையிறுதி வரை சென்றார் கார்த்திக்.இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார் கார்த்திக்.அடுத்ததாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

செம்பருத்தி தொடர் கார்த்திக்கை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்து.தற்போதுள்ள சின்னத்திரை ஹீரோக்களில் அதிக ரசிகர்களை கொண்டவராக கார்த்திக் உருவெடுத்தார்.இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.2020 டிசம்பர் மாதம் சில காரணங்களால் கார்த்திக் செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார்.இவற்றைத்தவிற ஜீ5 தயாரித்த முகிலன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.சமீபத்தில் கலாட்டா சார்பில் நடத்தப்பட்ட Dream Lover சீசன் 2வில் அதிக வாக்குகளை பெற்று வெற்றிபெற்றிருந்தார்.

சமூகவலைத்தளங்களில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாத கார்த்திக் இன்ஸ்டாகிராமில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டுவார்.தற்போது இன்ஸ்டாகிராமில் தன்னை நேசிப்பவர்களுக்காக உருக்கமான ஒரு பதிவு செய்துள்ளார்.தனக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் அனைவருக்கும் வெறும் நன்றி என்ற வாரத்தை மட்டும் போதாது,உங்கள் இதயத்தில் நான் இருப்பது போல என் இதயத்தில் நீங்கள் உள்ளீர்கள் இன்னும் இந்த அன்பு தொடரும் என்று நம்புகிறேன்.