திரையுலகிற்கு பல அற்புதமான படைப்புகளை தந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார். 

dhanush

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை. கேங்ஸ்டர்ஸ் படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இந்த படம். கொக்கி குமார் எனும் ரௌடியின் ஆரம்ப காலம் துவங்கி இறுதி கட்டம் வரை ஒவ்வொரு காட்சியையும் கச்சிதமாக செதுக்கியிருப்பார். தாயை இழந்து துயரத்தில் வாடும் ஒருவன், அரசியல் வாதிகளின் பிடியில் சிக்கி, உயிரை காப்பாற்றிக்கொண்டு பொழப்பு நடத்த பெரிய ரவுடியாகி பின்பு அரசியல் ஆசை ஏற்பட்டு இறுதியில் என்னவாகிறான் என்பதே இதன் கதைச்சுருக்கம். படம் என்பதை தாண்டி நம்மை புதுப்பேட்டையிலேயே வாழவைத்திருப்பார் செல்வராகவன். 

pudhupettai2

இன்று வரை இதன் இரண்டாம் பாகம் வெளிவராதா என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியை தெரிவித்துள்ளார் செல்வா. நேற்று கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் செல்வராகவன், NGK படத்திற்கு பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2 படத்தை துவங்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை விரும்பிகள்.