ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகியது. சமீபத்தில் இப்படம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

sasikumar

sasikumar

சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். கிராமப்புற பகுதிகளில் சசிகுமாருக்கென இருக்கும் மவுசால் சிறந்த வசூலை ஈட்டியது.

kennedyclub

kennedyclub

தற்போது இந்த படத்தின் உன்னாலே உன்னாலே பாடல் வீடியோ வெளியானது. விஜய் யேசுதாஸ் பாடிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். கிராமப்புற பெண்கள் படும் அவதியை எடுத்துரைக்கும் இந்த பாடல் காட்சி உண்மையாக இருந்தது.

sasikumar