அட்டகத்தி திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். முற்றிலும் வித்தியாசமான இசை பாணியால் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி, தளபதி விஜய்யின் பைரவா, தனுஷின் கொடி என உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் இசையமைத்துள்ளார். தற்போது தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட படங்களின் இசையில் பிஸியாக இருக்கிறார்.

Santhosh Narayanan Shares His Childhood Picture

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா தளத்தில் பதிவுகள் செய்தும், ரசிகர்களோடு உரையாடி வருகின்றனர். 

Santhosh Narayanan Shares His Childhood Picture

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் அவரது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் தந்தையுடன் உள்ள சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவில், திருமண நாள் வாழ்த்துகள் அம்மா அப்பா. சுட்டித்தனமான பையனாக இருப்பதற்கு என்னை மன்னிச்சுக்கோங்க என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.