தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சந்தானம். இறுதியாக இவர் நடிப்பில் டகால்டி திரைப்படம் வெளியானது. இவர் கைவசம் டிக்கிலோனா திரைப்படம் உள்ளது. இதில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். 

santhanam

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரிக்கும் பிஸ்கோத் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முழு மூச்சில் போய் கொண்டிருப்பதாக இயக்குனர் சமீபத்தில் பதிவு செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியது. ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். 

santhanam

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. ரெட்ரோ ஸ்டைலில் உள்ள இந்த போஸ்டருக்கு அமோக வரவேற்பு என்றே கூறலாம். ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் வெளிவரவுள்ளது.