காமெடியனாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது ஒரு ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் சந்தானம்.இந்த வருடத்தில் தில்லுக்கு துட்டு 2,A1 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களில் வெற்றியோடு துவங்கியுள்ளார்.

Santhanam Triple Action KJR Titled Dikkiloona

டகால்டி என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.இந்த படத்தை பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

Santhanam Triple Action KJR Titled Dikkiloona

இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்றும்,இது டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தின் டைட்டில் மற்றும் டைட்டில் லுக்கை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு டிக்கிலோனா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Santhanam Triple Action KJR Titled Dikkiloona