டைமிங் காமெடியால் மக்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் சந்தானம். லொள்ளு சபாவில் துவங்கி இன்று வரை சந்தானத்தின் காமெடி ட்ராக்கிற்கு பல ரசிகர்கள் உண்டு. சிம்புவின் மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சந்தானம், தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

காமெடியனாக நடித்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். முதன் முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு, இனிமே இப்படிதான், சக்கப்போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். 

இந்த ஆண்டு தீபாவளிக்கு பிஸ்கோத் திரைப்படத்தை வெளியிட்டார் சந்தானம். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிட்டது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. A1 கூட்டணி மீண்டும் இணைந்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர் ரசிகர்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். 

கே. குமார் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தை தெறிக்க விட்டது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கோட் சூட் அணிந்து கையில் மைக்குடன் அசத்தலாக காணப்படுகிறார் சந்தானம். சந்தானத்தின் இந்த ராக்ஸ்டார் லுக் ட்ரெண்டாகி வருகிறது. 

கடந்த வாரம் இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கினார் சந்தானம். படப்பிடிப்பு ஒரு புறம் நடக்க, தான் நடித்த காட்சிகள் வரை டப்பிங் செய்துள்ளார். படத்தில் சந்தானம் கானா பாடகர் என்று கூறப்படுகிறது. சந்தானம் போகின்ற வேகத்தை பார்த்தால் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டீஸர் அல்லது ட்ரைலரை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளனர் சந்தானம் ரசிகர்கள். 

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவான டிக்கிலோனா படமம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. சினிஷ் தயாரித்த இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் சந்தானம் 3 கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். டைம் ட்ராவல் பற்றிய படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.