டகால்டி படத்தின் ரிலீஸை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துவரும் படம் டிக்கிலோனா.பலூன் பட இயக்குனர் ஸ்ரீனிஷ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.கார்த்திக் யோகி இந்த படத்தை  இயக்கியுள்ளார்.

Santhanam Harbajan SIngh Dikkiloona Shoot Wrapped

இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்றும்,இது டைம் ட்ராவல் சம்மந்தப்பட்ட படம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Santhanam Harbajan SIngh Dikkiloona Shoot Wrapped

இந்த படத்தில் நட்பே துணை புகழ் அனகா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா புகழ் ஷிரின் இருவரும் ஹீரோயினாக நடித்துள்ளனர்.யோகி பாபு,ஆனந்தராஜ்,முனீஷ்காந்த்,மொட்ட ராஜேந்திரன்,நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.