2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

Sanjay Dutt Look From KGF Chapter 2 Leaked

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

Sanjay Dutt Look From KGF Chapter 2 Leaked

கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகள் தொடங்கின.இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்தின் ஆதிரா கெட்டப் இது தான் என்று ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது இந்த படத்தின் கெட்டப் தானா இல்லையா என்பது குறித்து படக்குழுவினர் விரைவில் விளக்கம் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanjay Dutt Look From KGF Chapter 2 Leaked