தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதில் சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்குகிறார்.

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.தற்போது இந்த படத்தில் ஒரு கதாநாயகியான ராஷி கண்ணா தன்னுடைய ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார்.விஜய்சேதுபதியுடன் சேர்ந்து நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.