இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்கிற பெயரில் படமாகிறது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இப்படம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசிய விஜய்சேதுபதி, 800 படத்தில் நான் நடிப்பது நிச்சயம். நான் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது கூட இல்லை. எனக்கு கிரிக்கெட்டை பார்த்தால் போர் அடிக்கும். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது இல்லை. சொல்லப் போனால் இதை தான் முத்தையா முரளிதரனிடம் கூறினேன். அதற்கு அவரோ, என் கதாபாத்திரத்தில் நடிக்க இது தான் சிறந்த தகுதி என்று கூறினாராம். 

800 படத்தில் நடிக்க விஜய்சேதுபதி உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளார். ஆனால் தற்போதுள்ள சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தால் வெயிட்டை குறைக்க முடியுமா என்று தெரியவில்லையாம். ராணா தயாரிக்கும் 800 படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். 

தற்போது இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார் என்ற ருசிகர செய்தி தெரியவந்தது. புரியாத புதிர், விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு பிறகு விஜய்சேதுபதி படத்திற்கு இசையமைக்கிறார் சாம் சி.எஸ். இந்த படத்தை தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய லாபம் மற்றும் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவான யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதியின் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. லாக்டவுனுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.