இசையமைப்பாளராகவும் நடிகராகவும் ரசிகர்களை ஈர்த்து வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். கடைசியாக இவர் நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படமான ட்ராப்சிட்டி படத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷின் வெற்றி பயணத்தில் அவரது ரசிகர்களுக்கு எவ்வளவு பங்குள்ளதோ அதே அளவிற்கு அவரது துணைவி சைந்தவிக்கும் பங்குள்ளது. 

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜெயில் படத்தில் நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். அபர்நிதி, ராதிகா, ரோபோ ஷங்கர், யோகிபாபு போன்றோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் முதல் பாடலான காத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

வரிசையாக படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று, விஜய் இயக்கத்தில் தலைவி மற்றும் தனுஷ் நடிக்கவிருக்கும் D43 படத்திற்கு இசையமைத்து வருகிறார். பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார். கடைசியாக அசுரன் படத்தில் சைந்தவி பாடிய எள்ளு வய பூக்கலையே அதிக பாராட்டுகளை பெற்றது. இந்த அழகான தம்பதியினருக்கு சமீபத்தில் குட்டி ஏஞ்சல் பிறந்தது.

இந்நிலையில் பாடகி சைந்தவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கணவர் ஜி.வி.பிரகாஷுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என இனிய கணவருக்கு 7-வது திருமண நாள் வாழ்த்துக்கள். ஒவ்வொரு வருடமும் உங்கள் மீது உள்ள காதல் வளர்ந்து கொண்டே போகிறது. நான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், நீங்கள் என் மீது மிகுந்த அக்கறை காட்டுகிறீர்கள். 

நம் குழந்தையின் மீது அன்புள்ள அப்பாவாக நீங்கள் நடந்து கொள்வதை பார்க்கும் பொழுது, இன்னும் என் காதல் அதிகரிக்கிறது. நீங்களும், இந்த சிறிய இளவரசியும் என் வாழ்வில் நடந்த மிகச்சிறந்த விஷயங்கள் என சந்தோஷமாக பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர். இந்த இனிய நாளில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.