கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரை பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பதிவுகள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். 

Roboshankar

இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகள் இந்திரஜா சங்கருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது வீட்டிலேயே டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அசத்தி வருகிறது. பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கேரக்டரில் நடித்த இந்திரஜா சங்கருக்கென தனி ரசிகர் பட்டாளமுண்டு. நடனத்தில் தந்தையை போல் பட்டையை கிளப்பும் இந்திரஜாவை பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். 

IndrajaShankar

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த வாத்தி கம்மிங் பாடலில் தளபதியின் நடனத்தை பார்க்க மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். அனிருத் இசையில் காகா பாலா இந்த பாடலை பாடியிருந்தார். தினேஷ் மாஸ்டர் இந்த பாடலுக்கு கோரியோக்ராஃப் செய்துள்ளார்.