உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நான்காவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. பிரமாண்ட தொடக்க நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டனர். மொத்தம் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் பதினாலாவது போட்டியாளராக அர்ச்சனா வந்தார் பிரபல தொகுப்பாளர் ஆனா அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக பின்னணி பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாகவும், அதற்காக அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இச்செய்தி உண்மை தான் என்பது தெரியவந்துள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், RJ சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். அவரை பார்த்தவுடன் அர்ச்சனா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சில ஹவுஸ்மேட்ஸ் ஆச்சர்யத்தில் பார்க்கின்றனர். இனி நிச்சயம் பிக்பாஸ் சூடுபிடிக்கும் என்று ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

சமீபத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த பாடகி சுசித்ரா, நள்ளிரவில் தனது அறையிலிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் அவர் தன்னை யாரோ கொலை செய்ய வருவதாகவும், காப்பாற்றுமாறும் ஹோட்டல் ரிசப்சனில் சென்று முறையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவரே கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. 

காலை வெளியான ப்ரோமோவில், எவிக்ஷன் குறித்து பேசுகிறார் கமல். நான் தான் போவேன் என்று தோணுகிறது என்று கூறுனார் வேல்முருகன். நீங்க ஜோசியர் ஆயிட்டிங்களா என்று கமல் கேள்வி எழுப்புகிறார். மேலும் வெளியேறும் நபரை வழியனுப்பி வைக்கின்றனர் பிக்பாஸ் வீட்டினர். ஒரு என்ட்ரி மற்றும் எவிக்ஷன் கொண்ட இன்றைய நாள் களைகட்டும் என்றே கூறலாம்.