கடந்த மாதம் இந்திய சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பலரையும் சோகமாக்கிய ஒரு நிகழ்வு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம்.34 வயதான எதற்காக தற்கொலை செய்து கொண்டார் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான பின்னரே சுஷாந்த் சினிமாவுக்குள் நுழைந்தார்.அப்படி மக்கள் மத்தியில் அவரை பிரபலமாக்கிய ஒரு தொடர் பவித்ரா ரிஷ்டா.இந்த தொடர் சுஷாந்திற்கு முதல் வெற்றியாக அமைந்தது.

இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதை கவர்ந்து வந்த சுஷாந்த்.கிரிக்கெட் வீரரும்,இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார்.இந்த படத்தின் மூலம் இவர் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக மாறினார்.கிரிக்கெட் ரசிகர்களும் இவரை கொண்டாட தொடங்கினர்.

கடந்த சில மாதங்களாக மனஅழுத்ததில் இருந்த 34 வயதான சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பண்ட்ராவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார்.இந்த செய்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற காரணம் தெரியவில்லை இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இவரது மரணம் குறித்து பலரிடமும் விறுவிறுப்பாக விசாரணை நடித்து வருகின்றனர்.பாலிவுட் இண்டஸ்ட்ரியில் இருக்கும் வாரிசு அரசியல் தான் சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.பல வெளிவராத விஷயங்களை பல பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.சுஷாந்த் போன்ற ஒரு நடிகரை பாலிவுட் பிரபலங்கள் கண்டுகொள்ளாதது ஏன் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது குறித்து பலரிடமும் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக நடிகை Rhea Chakraborty சுஷாந்த் சிங் இருவரும் காதலித்து வந்தனர் என்றும் இருவரும் லிவ்-இன் ரிலேஷனில் இருந்து வந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.லாக்டவுனிலும் இருவரும் ஒன்றாக இருந்தனர் என்றும் தகவல்கள் வந்தன.இருவருக்கும் நவம்பரில் திருமணம் நாடகவிருந்தது என்றும் தகவல்கள் வந்தன.சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாக தான் இவர் சுஷாந்தின் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் தகவல்கள் வந்தன.சுஷாந்தின் மரணம் குறித்து Rhea Chakrabortyவிடம் விசாரணையும் நடைபெற்றது.தற்போது சுஷாந்தின் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சிலவற்றை Rhea Chakraborty தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த விடீயோக்களை சுஷாந்தின் ரூம்மேட் ஆனா சித்தார்த் படம் பிடித்துள்ளார்.இந்த வீடியோக்களை ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caught pretending to read 🤣 Sometimes I just open a book and space out 😇 #rheality Caught by - @siddharth_pithani 😅

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#quarantine is definitely a vibe ! #rheality 🌸🌼🌸 Curator - @siddharth_pithani 🌼

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on