தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 

reshma

பிக் பாஸ் 3-க்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று அசத்தலாக துவங்கியது. தண்ணீர் மற்றும் எரிவாயுவிற்கு மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளது. இறுதியாக ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா மற்றும் சரவணன் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

reshma

reshmacrying

சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ரேஷ்மா, கலாட்டா குழுவிற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், லாஸ்லியா அதிகம் அடம்பிடிப்பாங்க. ஒரு வேளை வயதாக இருக்குமா என்று நினைத்தேன். சேரன் சார் குறித்து மீரா பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கும் சேரன் சாருக்கும் சிறு சிறு பிரச்சனை இருந்தாலும், மீரா நடந்து கொண்டது தவறு. பிக்பாஸ் வருவதற்கு முன்பே நானும் சாண்டி மாஸ்டரும் நல்ல நண்பர்கள். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தை எனக்கு தெரியும். ஷெரின் தர்ஷன் காதல் அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் இருவர் பற்றி நான் அறிவேன். டாஸ்க்காக அப்படி நடந்து கொண்டார்கள்.