தமிழ் சினிமாவின் கிளாஸ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் சீரிஸ் குயின். மறைந்த நடிகை மற்றும் முதலமைச்சரான இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரிஸ் ஆகிறது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்ற செய்திகள் பெரிதளவில் வரவேற்பை பெற்றது. 

Recent Update On Jayalalitha Biopic Featuring Ramya Krishnan In Lead Role

சசிகலா ரோலில் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார் என்ற செய்தியும் சமீபத்தில் கசிந்தது. நடிகர்கள் வம்சி கிருஷ்ணா மற்றும் இந்திரஜித்தும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். AVM ஸ்டுடியோஸில் இதன் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும். இந்த வருட இறுதிக்குள் இதன் இரண்டு எபிசோடுகள் வெளிவரக்கூடும் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது.

Recent Update On Jayalalitha Biopic Featuring Ramya Krishnan In Lead Role

வெப் சீரிஸுக்கு என தனி வரவேற்பு உள்ள நிலையில், கௌதம் மேனனின் இந்த படைப்பு மிகுந்த எதிர்பார்பில் உள்ளது. இவரது உருவாக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் குறித்தும் அப்டேட் வராதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் GVM ரசிகர்கள்.

Recent Update On Jayalalitha Biopic Featuring Ramya Krishnan In Lead Role