தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Rathna Kumar Hints About Master Special on June 22

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Rathna Kumar Hints About Master Special on June 22

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.ஜூன் 22 விஜயின் பிறந்தநாள் அன்று மாஸ்டர் படத்தில் இருந்து ஏதும் ஸ்பெஷல் ரிலீஸ் உள்ளதா என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ஆவலோடு இருந்து வருகின்றனர்.

Rathna Kumar Hints About Master Special on June 22

இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா சில கிளாசிக் படங்களுக்கு போஸ்டர் வெளியிட்டு வந்தார்.அவரது டீவீட்டுக்கு பதிலளித்த இயக்குனர் ரத்னகுமார் கிளாசிக் போஸ்டர் எல்லாம் சூப்பர் ,8 நாள்ல ஜூன் 22 வருது என்று பதிவிட்டுள்ளார்.இதன்மூலம் மாஸ்டரில் இருந்து ஒரு ஸ்பெஷல் போஸ்டர் அல்லது மோஷன் போஸ்ட்டரை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது.