தென்னிந்திய திரையுலகில் முடிசூடா நாயகியாக அசத்தி வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தெலுங்கு திரையுலகம் தவிர்த்து தமிழிலும் பிரபலமாக திகழ்கிறார். மகேஷ் பாபு நடித்த சரிலேறு நீக்கெவரு படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் ஈர்த்தது. 

Rashmika Mandanna Shares Her Childhood Coverpage

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டிக்டாக் என பல வீடியோக்களை பதிவு செய்தும், சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர். 

Rashmika Mandanna Shares Her Childhood Coverpage

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சிறுவயதில் பிரபல பத்திரிகையான கோகுலத்தின் அட்டைப் படத்திற்கு கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை அசத்தி வருகிறது. இந்த புகைப்படம் 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. எனது தாயார் இன்னும் இதை பத்திரமாக வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை எடுக்கும் போது நடந்த ஷுட்டிங்கை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இவையனைத்தும் தான் உங்கள் அன்பை பெற வைத்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவின் கீழ், ராஷ்மிகாவின் தமிழ் என்ட்ரி எப்போது என கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.