கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.துறுதுறுவென இந்த படத்தில் இருக்கும் இவரது கேரக்டர் பலராலும் ரசிக்கப்பட்டது.எமோஷனல் காட்சிகளிலும் அசத்தியிருப்பார் ராஷ்மிகா.

இந்த படத்தை பரத் கம்மா இயக்கியிருந்தார்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பலராலும் பாராட்ட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.இதனை தவிர சில முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.மிஷன் மஞ்சு என்ற படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா.

இவர் சமீபத்தில் ஒரு ஆல்பம் பாடலில் நடித்திருந்தார் இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த பாடலுக்கு தற்போது நடனமாடி வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.