விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து சில காரணங்களால் இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ்.தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வரும் நட்சத்திரங்களுடன் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் ராஷ்மி.இதனை தொடர்ந்து முதல் சீசனை அடுத்து இந்த சீசனிலும் ராஷ்மி நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

ஆனால் ராஷ்மி தனது திருமணத்துக்கு பத்திரிக்கை வைக்கத்தான் நாம் இருவர் நமக்கு இருவர் செட்டிற்கு வந்துள்ளார் என்பதை கதையின் நாயகன் செந்தில் தெளிவுபடுத்தினார்,அதோடு ராஷ்மி புதிய சீரியலில் நடிப்பதையும் உறுதி படுத்தினார்.இதேபோல ராஷ்மியும் தான் நாம் இருவர் சீரியலில் நடிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.வரும் பிப்ரவரி 8ஆம் தேதி ராஷ்மிக்கு திருமணம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mirchi Senthil (@mirchisenthil983)