ரஞ்சிதமே பாட்டு மட்டுமல்ல... தளபதி விஜயின் வாரிசு பட ருசிகர தகவல் கொடுத்த பாடகி MMமானசி! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தளபதி விஜயின் வாரிசு பட ருசிகர தகவல் கொடுத்த மானசி,ranjithame mm manasi dubbed for rashmika in thalapathy vijay in varisu vaarasudu | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி இந்த 2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதே தினத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸாகி இருக்கிறது. இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

முதல்முறையாக இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான வாரிசு திரைப்படம் இன்று (ஜனவரி 14)தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. முதல் முறையாக தளபதி விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக தமன் இசையில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிய எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் ட்ரெண்டிங்கில் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது. இப்பாடலை தளபதி விஜயுடன் இணைந்து MM.மானசி பாடியுள்ளார். ரஞ்சிதமே படலை அட்டகாசமாக பாடியுள்ள MM.மானசிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் ரஞ்சிதமே பாடல் பாடியது மட்டுமல்லாமல், வாரிசு படத்தின் தெலுங்கு வெர்ஷனான வாரிசுடு-ல் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் டப்பிங் கொடுத்திருப்பதாகவும், தனது தங்கை MM.மோனிஷா,  கீர்த்தி சாந்தனுவிற்கு (KIKI விஜய்) தெலுங்கில் டப்பிங் செய்துள்ளதாகவும் தற்போது MM.மானசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை அறிவிக்கும் அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by M.M.Manasi (@manasimm)

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - கைகோர்த்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ
சினிமா

சர்தார் தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - கைகோர்த்த சூப்பர் ஹிட் பட இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ

தளபதி விஜயின் மேலாளர் தயாரிக்கும் முதல் படைப்பு... புதிய படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

தளபதி விஜயின் மேலாளர் தயாரிக்கும் முதல் படைப்பு... புதிய படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் இதோ!

அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் - வைரலாகும் துணிவு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே!
சினிமா

அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர் - வைரலாகும் துணிவு பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே!