மக்களால் மிகவும் விரும்பப்பட்ட தொகுப்பாளர்கள் பட்டியலில் ரம்யாவுக்கு முக்கிய இடம் உண்டு. டிடி-க்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளர்களில் பெரிதும் விரும்பப்பட்டவர். சினிமாவில் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரம்யாவுக்கு அடுத்து ஒரு ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, கேம் ஓவர் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 

எப்போதும் போட்டோஷூட்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார் ரம்யா. கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் தன்னை மெருகேற்றிக்கொள்ளும் பணிகளில் ரம்யா தீவிரமாக இறங்கியிருந்தார். 

இந்நிலையில் அரசு அன்லாக் 4.0 என்ற பெயரில் சில தளர்வுகளை அறிவித்து இருக்கிறது. அதன் படி தற்போது ஷாப்பிங் மால்களும் திறக்கப்பட்டு இருக்கின்றன. முதல் நாளிலேயே விஜே ரம்யா சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கின்றன. மாஸ்க் அணிந்தபடி தான் ரம்யா அங்கு சென்று ஷாப்பிங் செய்திருக்கிறார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மால்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாளே அவர் ஷாப்பிங் செய்ய கிளம்பி இருக்கிறார். அது பற்றி பேசிய அவர், "நான் முதலில் மாலுக்கு செல்வது பற்றி கொஞ்சம் தயக்கம் காட்டினேன், அதிகம் யோசித்தேன். ஆனால் அங்கு எடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் சுத்தமாக இருப்பதற்கு அவர்கள் செய்திருக்கும் விஷயங்களை பார்த்து நான் என் இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன்."

நான் மாலுக்கு உள்ளே நுழையும் முன்பே வாயிலில் தர்மல் ஸ்கேனர் கொண்டு என்னுடைய புகைப்படம் எடுக்கப்பட்டு அதன் மூலமாக என்னுடைய உடல் வெப்பம் கண்டறியப்படுகிறது. அதன் பிறகு என்னுடைய பையை அதற்குரிய இடத்தில் நான் டெபாசிட் செய்தேன். 

வழக்கமாக நடக்கும் சோதனைகளுக்குப் பிறகு நான் நேராக சானிடைசர் வழங்கும் ஆட்டோமேட்டிக் எந்திரத்தின் முன்பு சென்றேன். அது ஒரு சிறந்த விஷயம். காரணம் பாட்டிலில் வைத்து இருந்தால் அதை பலரும் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் சனிடைசர் பயன்படுத்துவதற்கு உண்டான பலன் கிடைக்காமல் போய்விடும். ஆனால் ஆட்டோமேடிக் எந்திரம் இருப்பதால் அப்படி எந்த பிரச்சனையும் இல்லை.

நான் ஒவ்வொரு கடைக்கு உள்ளே செல்லும்போதும் என் கையில் சானிடைசர் வழங்கினார்கள். மால்களில் உள்ள கடைகள் சுழற்சி முறையில் திறக்கப்படுகின்றன என்பதையும் நான் அறிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் ரம்யா. XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது.