பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.

Ramcharan Releases A New Picture From RRR JrNTR

RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

Ramcharan Releases A New Picture From RRR JrNTR

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்று ஜூனியர் NTR பிறந்தநாளுக்கு எதுவும் வெளியிடமுடியாததால் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்தனர் படக்குழு.இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராம்சரண் ஷூட்டிங் ஸ்பாட்டில் NTR உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.