தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர், தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Rakul Preet Singhs Cycle Ride In Lockdown

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர் திரை பிரபலங்கள். உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஒரு சிலர் சமூக வலைத்தளங்களின் நேரலையில் தோன்றி ரசிகர்களோடு உரையாடி வருகின்றனர். 

Rakul Preet Singhs Cycle Ride In Lockdown

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சைக்கிள் ஓட்டும் வீடியோவை பகிர்ந்துள்ளார். லாக்டவுனில் இப்படி சைக்கிள் ஓட்டலாமா ? வீட்டிலேயே பத்திரமாகவும் பாதுகாப்புடனும் இருங்கள் என கமெண்ட்டில் கேள்விகளை கேட்டு பதிவு செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். முகக்கவசம் அணிந்து சரியான பாதுகாப்புடன் சைக்கிளிங் செய்கிறார். இருந்தாலும் ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வருகின்றனர். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் நடித்துள்ளார் ரகுல்.