சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் சென்னையில் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் நிறுத்தப்பட்டது.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

அயலான் படத்தின் வேலைகளை அரசு சில தளர்வுகளை அறிவித்ததும் ஆரம்பிக்கலாம் என்று படக்குழுவினர் தயாராக உள்ளதாகவும் , குறைந்த குழுவினருடன் படப்பிடிப்பை நடத்த தயாராக உள்ளதாகவும் பிரபல பாலிவுட் மீடியா ஒன்று தெரிவித்தது.மேலும் அப்படி ஷூட்டிங் தொடங்கினால் இந்த நிலைமையில் ரகுல் ப்ரீத் வரமறுத்ததாகவும் இதனால் அவரை மாற்றுவதற்காக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்தது.

இந்த செய்தியை பார்த்த ரகுல் ப்ரீத் சிங் கடுப்பாகி இது போன்ற தவறான செய்திகளை உரியவரிடம் விசாரிக்காமல் பதிவிடவேண்டாம் என்று தெரிவித்தார்.மேலும் அந்த மீடியாவிடம் ஷூட்டிங் எப்போது ஆரம்பிப்பார்கள் என்று கேட்டு சொல்லுங்கள் வேலை செய்ய மிகவும் ஆர்வமாக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ரகுல் பதிவிட்ட டீவீட்டை கீழே உள்ள லிங்கில் காணலாம்