தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சில ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரகுல்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கொரோனா நேரத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது,வீடியோக்களை பகிர்வது என்று தனது பொழுதை கழித்து வந்தார் ரகுல்.

இவரது சமீபத்திய மாலத்தீவு ட்ரிப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வந்தன.இந்நிலையில் ரகுல் ப்ரீத் ஷூட்டிங்கிற்கு வராததால் சில படங்களில் இருந்து நீக்கப்பட்டார் என்று சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

இது குறித்து தற்போது ரகுல் தரப்பில் இருந்து விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றும் தான் நடிக்கும் படங்கள் குறித்த லிஸ்ட் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் ரகுல் தரப்பினர்.இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்