ரசிகர்களின் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 9:30 மணிக்கும் விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது

பிரியங்கா தேஷ்பாண்டே,இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து,பாவனி ரெட்டி,நதியா சங்,வருண்,இமான் அண்ணாச்சி,ஐக்கி பெர்ரி,சுருதி ஜெயதேவன்,அபிநய் வட்டி,அக்ஷரா ரெட்டி,தாமரைச்செல்வி,சின்ன பொண்ணு,சிபி சந்திரன்,நிரூப் நந்தகுமார் ஆகியோர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

முன்னதாக வெளியான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் இன்றைய (அக்டோபர் 4) ப்ரோமோ வீடியோகளில் முதல் வாரத்திற்கான கேப்டன் தேர்வு மற்றும் பிக் பாஸ் ரூல்ஸ் என கலகலப்பாக நகர்கிறது. இந்நிலையில் தற்போது இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.

நடிகர் ராஜு ஜெயமோகன், மேடை நாடக நடிகை தாமரைச்செல்வி , நடிகை அக்ஷரா ரெட்டி, ராப் பாடகர் ஐக்கி பெர்ரி மற்றும் நடிகர் வருண் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ராஜு ஜெயமோகன் சொல்லும் கதையில் கலகலக்கிறது பிக்பாஸ் வீடு. கலப்பான அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.