டிஸ்கவரி தொலைக்காட்சியின் பிரபலமான தொடர்களில் ஒன்று மேன் வெர்சஸ் வைல்ட்.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் க்ரில்ஸ் உலகளவில் மிகவும் பிரபலமானவர்.காட்டுக்குள் தனியாக சுற்றித்திரியும் இவரது ஷோ மிகவும் வைரலானது.

Rajinikanth Tweets About Into The Wild Bear Grylls

கடந்த வருடம் இவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய மேன் வெர்சஸ் வைல்ட் சிறப்பு தொகுப்பு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.இந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நடைபெற்றது.

Rajinikanth Tweets About Into The Wild Bear Grylls

இந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாகவுள்ளது.இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சூப்பர்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனது வாழ்க்கையில் மறக்கமுடியாத சாகச நிகழ்வுகளில் ஒன்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது என்று தெரிவித்துள்ளார்.