இந்திய சினிமா ஒரு நூலகம் என்றால், அதில் நாம் கண்டெடுக்கும் முதல் புத்தகம் நடிகர் கமல் ஹாசன். உலகையே திரும்பி பார்க்கச்செய்யும் நம் உலகநாயகன் சினிமா மட்டுமின்றி அரசியல் பாதையிலும் சீராக செயல்பட்டு வருகிறார். 

Rajinikanth Conveyed His Wishes To Kamal Haasan Indicating His Party Makkal Needhi Maiyyam Completing One Year Successfully

இவரது மக்கள் நீதி மய்யம் எனும் அரசியல் கட்சி துவங்கி ஒரு வருடம் ஆயிற்று. ஆரம்பித்த ஒரு வருடத்தில், சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இக்கட்சி சார்ந்தவர்கள். தற்போது இதை பாராட்டும் வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

Rajinikanth Conveyed His Wishes To Kamal Haasan Indicating His Party Makkal Needhi Maiyyam Completing One Year Successfully

அதில், கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாக போட்டி இடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்...என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொது வாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...என்று தன் நீண்ட கால நண்பரான கமல் ஹாசனுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார்.

திரை வாழ்க்கையை தாண்டி சுய வாழ்விலும் கமல் ரஜினியின் இந்த ஒற்றுமை பண்பை பிற்கால நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும்.

Rajinikanth Conveyed His Wishes To Kamal Haasan Indicating His Party Makkal Needhi Maiyyam Completing One Year Successfully