அண்ணாத்த படத்தின் ரொமான்டிக் பாடல் உருவான விதம் ! ப்ரோமோ இதோ
By Aravind Selvam | Galatta | October 11, 2021 11:28 AM IST
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக 2020 பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.பின்னர் முக்கால்வாசி ஷூட்டிங் முடிக்கப்பட்டு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இரண்டாவது பாடலான சாரக்காற்றே பாடல் சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரலாகி வருகிறது.தற்போது இந்த பாடல் உருவான விதம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்றை இசையமைப்பாளர் இமான் பகிர்ந்துள்ளார்
Here’s a glimpse of the making of #SaaralKaattrae!
— Sun Pictures (@sunpictures) October 10, 2021
Watch the full song here ▶️ https://t.co/nvMYqDEMZF
#AnnaattheSecondSingle @rajinikanth @directorsiva @immancomposer @sidsriram @shreyaghoshal #Yugabharathi pic.twitter.com/hKtteb5BvB
Suriya's Jai Bhim - Intense Motion Poster Video Released! Watch VIDEO Here!
11/10/2021 06:58 PM
Shriya Saran and husband Andrei Koscheev welcome their first child, a baby girl
11/10/2021 06:40 PM