தமிழ் திரையுலகில் இயக்கம் மற்றும் நடிப்பு என அசத்துபவர் சசிகுமார். இவரது நடிப்பில் கடைசியாக நாடோடிகள் 2 திரைப்படம் வெளியானது. சசிகுமார் கைவசம் எம்.ஜி.ஆர் மகன், கொம்பு வச்ச சிங்கம் டா போன்ற படங்கள் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. 

sasikumar sasikumar

அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ராஜவம்சம். இதில் நாயகியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். இப்படத்தில் சசிகுமாருடன் விஜயகுமார், தம்பி ராமையா, மனோபாலா, ராஜ்கபூர், சிங்கம்புலி, ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ராமசாமி ஒளிப்பதிவு செய்கிறார். 

sasikumar rajavamsam sasikumar

ராஜவம்சம் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதன் பிறகு மானே உன்ன பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி B, C சென்டரில் பட்டையை கிளப்பியது. இதனைத்தொடர்ந்து மாப்பிள்ள வந்தா பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியது. முகேஷ், சாம் சி.எஸ், சிந்து பாடிய இந்த பாடல் வரிகளை சாம் சி.எஸ் எழுதியுள்ளார்.