பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் படம் RRR.ராம்சரண் ஜூனியர் NTR இருவரும் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

Rajamouli RRR Movie Postponed To Jan 8 2021

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

Rajamouli RRR Movie Postponed To Jan 8 2021

தற்போது இந்த படம் ஜனவரி 8ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றாலும் ஒரு வித்தியாசமான தரமான படத்தை ரசிகர்களுக்கு தருவோம் என்று உறுதி தெரிவித்துள்ளனர்.