விஜய் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இதன் முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அன்ஷு ரெட்டி.

இந்த தொடரில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.இதனை தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார்.இந்த தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவற்றை தவிர பல தெலுங்கு தொடர்களில் நடித்து தென்னிந்தியாவின் முக்கிய சீரியல் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அன்ஷு ரெட்டி.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் அன்ஷு ரெட்டி தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக தவறான செய்தி ஒன்று பரவி வந்தது,இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து தலையில் அடித்து கொள்வது போல ஸ்மைலி ஒன்றையும் போட்டுள்ளார்.இதுபோன்ற வதந்திகளை பகிரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

raja rani fame anshu reddy reacts to fake death rumours